லைகா விட்ட இடத்தைப் பிடித்த போனிகபூர்.
சினிமா இண்டஸ்ட்ரியில் கருமமே கண்ணாக இருந்தால்தான் கோடிகளை எண்ண முடியும். ச ற் றே கீழே குனிந்தாலும் குப்புறத் தள்ளிவிட்டு கோப்பையை கொண்டு போய்விடுவார்கள்.
நெல்சன் திலீப்குமார்,விக்னேஷ் சிவன் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருந்தார் சிவகார்த்திகேயன். விக்கியின் படத்தை லைகா தயாரிப்பதாக இருந்தது. உள்குத்து விவகாரத்தில் லண்டன் கருணாஸ் பிய்த்துக் கொண்டு போனதால் அவர் ஒப்பந்தம் செய்த படங்களை லைகா கை கழுவி விட்டது.
பார்த்தார் விக்னேஷ் சிவன், காதலி நயனுடன் பிறந்தநாள் கொண்டாட வெளிநாடு சென்றவர் அமெரிக்காவில் இருந்த போனிகபூர் -ஜான்வியை நயனுடன் சேர்ந்து சந்தித்தார் .பேசினார்கள்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் விக்னேஷ் சிவன் படத்தை போனி கபூர் தயாரிக்கப் போகிறாராம் .
தல அஜித்துக்குப் பிறகு போனி தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது முக்கியமான செய்திதானே!