இந்தியாவின் எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு தினமும் கற்பழிப்புக் கொடுமை. பச்சைக் குழந்தையையும் விட்டு வைப்பதில்லை. காமக் கொடூரன்களை தாராளமாக நடமாட வைத்திருக்கிறார்கள். அண்மையில் ஹைதராபாத்தில் டாக்டர் பிரியங்கா என்பவரை நான்கு மிருகங்கள் வேட்டையாடிவிட்டு உயிருடன் தீயிட்டுக் கொளுத்திவிட்டார்கள். இந்த அரக்கத்தனத்தை கண்டித்து நாடெங்கும் கண்டனங்கள்.!
வேறென்ன செய்ய முடியும்?
நடிகை கீர்த்தி சுரேஷ் என்ன சொல்கிறார்?
“அதிர்ந்து போனேன்.இதயம் நொறுங்கிப்போனது. மிகவும் பாதுகாப்பான நகரம் ஹைதராபாத் என நம்பியிருந்தேன்.இனி என்னால்அப்படி பேச முடியாது..
பெண்கள் பயமின்றி எந்த நேரமும் பகலில் நடக்கமுடியும் என்கிற நிலைமை நமது நாட்டில் எப்போது வரப்போகிறது?
கற்பழிப்பு வெறியர்கள் வேட்டையாடப்படவேண்டும். நான் கர்மாவை நம்புகிறவள் ” என்பதாக கூறியிருக்கிறார்.