
மகிழ்ச்சியான செய்தி. கேப்டன் விஜய காந்த் வீட்டுத் திருமண செய்தி.
முன்னைப் போல அரசியலில் தீவிரமாக இறங்கி களப்பணியாற்ற இயலாத நிலையில்தான் விஜயகாந்த் இருக்கிறார். அவரால் திருத்தமாக பேச இயலாத நிலை. இதனால் கட்சிப் பொறுப்பை திருமதி விஜயகாந்த் கையில் எடுத்திருக்கிறார். அவரது மகன்கள் இருவரில் விஜய பிரபாகரன் மேடைகளில் பேசுகிற அளவுக்கு திறமை பெற்றிருக்கிறார்.
அவருக்கு கோவையை சேர்ந்த ஸ்டாம்பு வெண்டர் இளங்கோவின் பெண் கீர்த்தனாவை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். பெண் பார்த்து நிச்சயம் செய்யும் மங்கள நிகழ்வில் விஜயகாந்தின் உறவுகள் கலந்து கொண்டிருப்பது முக்கியமான மாற்றமாகும்.
உடல் நலமில்லாது இருப்பதால் விஜயகாந்த் கலந்து கொள்ள இயலவில்லை. கேப்டன் வீட்டில் நடக்கவிருக்கிற முதல் திருமண நிகழ்வு என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். திருமணம் புத்தாண்டில் நடக்கப்போகிறது.












