
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிற ‘தர்பார் ‘படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடந்தது. லைகா நிறுவனம் மிகவும் சிறப்பாக விழா மேடையை அமைத்திருக்கிறது. முக்கிய கலைஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆனால் ஒரே ஒரு பிரபலம் மட்டும் விழாவை புறக்கணித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. நயன்தாரா.
ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் விழாவில் கலந்து கொண்டு என்ன பேசப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்கள் யாரும் துடிக்கவில்லை. கலந்து கொண்டிருந்தால் நயனுக்குத்தான் நல்ல பெயர் கிடைத்திருக்கும். அவரது அகம்பாவத்தை யாரும் ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை.
உங்கள் நான் விழாவுக்குப் பின்னர் ரஜினி கலந்து கொள்கிற விழா என்பதால் இந்த மேடையில் என்ன பேசப்போகிறார் என்பதை அறிய நாடு எதிர்பார்க்கிறது. ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன. அத்தனை கட்சிகளும் காத்திருக்கின்றன.
படத்தின் இயக்குநர் ஏ.ஆர் .முருகதாஸ் பேசுகையில் தன்னை ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் என்பதாக சொல்லிக் கொண்டார்.
“ரஜினி சாரை வைத்து தர்பார் படத்தை இயக்கியது எனக்கு பேரானந்தமாக இருந்தது. நிலாவில் இறங்கி சாப்பிட்டதை போல இருக்கிறது. அவரது சாயல் இல்லாத நடிகர்கள் யாருமில்லை. எம்.ஜி.ஆர்.க்குப் பிறகு ரஜினிசார்தான்” என்று சொன்னார்.
தனக்கு வெகு சிறப்பான நாள் என்பதாக இசை அமைப்பாளர் அனிருத் சொன்னார். “தலைவர் படத்துக்கு இசை அமைப்பது எனது கனவாக இருந்தது. அது நிறைவேறி இருக்கிறது.இந்த வருட பொங்கல் செம டிரீட்டாக இருக்கப்போகிறது” என்கிறார் அனிருத்.












