
சூப்பர் ஸ்டார் ரஜினியை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடிக்கடி விமர்சனம் செய்யக்கூடியவர்.
ரஜினியை தமிழன் என ஒப்புக் கொள்வதில்லை.
ஆனால் தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரோ “தமிழ்நாட்டுத் தண்ணீரை யார் குடித்தாலும் அவர்கள் தமிழர்தான்.ஆகவே நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்.கமலுடன் இணைந்து பாடுபடுங்கள்” என சீமானுக்கு பதில் சொல்லியிருந்தார் .
இந்த நிலையில் நேற்று (ஞாயிறு ) நடந்த தர்பார் பட விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ் பகிரங்கமாகவே சீமானை கண்டித்துப் பேசியிருந்தார்.
“எனக்கு அவரு பேர சொல்லக்கூட பிடிக்கல .நான் இப்படி பேசுனதுக்காக என் தலைவர் என்னிடம் கோவிச்சுக்கிட்டாக்கூட பரவாயில்ல. ஆனா சீமான் பேச்சு நாட்டுக்கு நல்லதில்லை” என்று லாரன்ஸ் பேசியிருந்தார்.
அதற்கு சீமான் இன்று நக்கலுடன் ” தம்பி, லாரன்சு….நீ எந்த நாட்டைப் பத்தி சொல்றேன்னு தெரியல.நான் என் நாட்டுக்காக, என் மக்களுக்காக பேசி வர்றேன்” என பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த பேச்சு சண்டை இத்துடன் நின்று விடுமா தொடருமா?












