சொந்த கட்சியிலும் சரி,நாட்டு மக்களிடமும் சரி செல்வாக்கு இல்லாத மனிதராகி விட்டவர் சுப்பிரமணியன் சுவாமி.
ஆனால் டம்பம் அடிப்பதில் கில்லாடி. தன்னை சாணக்கியர் என நினைத்துக் கொண்டு பேசுவார். “டி .டி வி.தினகரன் அதிமுகவை கிழித்து தொங்கப் போட்டுவிடுவார் “என ஆருடம் சொன்ன கிளி ஜோதிடர்தான் இவர். மெத்த படித்த படிப்பு இவரது வாயினாலேயே வீணாகிப் போனது என்னவோ உண்மை.!உட்கட்சி விவகாரம் பண்ணுவதில் கில்லாடி என சொல்லலாம்.
இருப்பது பிஜேபியில் .அந்த கட்சியின் மானத்தை வாங்குவதும் ஒரு வகையான சாதனைதான்!
சென்னை வந்திறங்கிய சு.சுவாமி சொன்னதென்ன?
“வெங்காய விலை உயர்வு நம்முடைய (பிஜேபி.) தோல்விதான்! மக்களின் கையில்தான் பணமில்லையே? எப்படி வாங்க முடியும். நான் அதிக அளவில் பொருளாதாரம் பற்றிய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். நல்ல சேல்ஸ். ஆனால் நிர்மலா சீதாராமனுக்கு புரியனுமே!” என பெரும்போடாக போட்டுத் தள்ளியிருக்கிறார். இந்தியாவின் நிதி அமைச்சருக்கு பொருளாதாரம் புரியாது என்பது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு.! வெங்காயமே சாப்பிடுவதில்லையாம் நம்ம நிதி அமைச்சர்.அது தனிக்கதை.
இன்னொரு ஆருடமும் சொல்லியிருக்கிறார்.