சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168 ஆவது படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா.
அல்டிமேட் ஸ்டார் அஜித் படங்களை தொடர்ந்து இயக்கிவந்தவர் சிவா. இவர் சொன்ன கதை போயஸ்கார்டன் நாயகன் ரஜினிக்குப் பிடித்துப் போனதால் வருகிற 12 ஆம் தேதி தனது புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார்.
இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் வழக்கம் போல தலைவர் 168 என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக சொன்னார்கள். தற்போது தலைவரின் தில்லானா தில்லானா நடிகை மீனா நடிக்கப்போகிறார் என்பதை தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருக்கிறது. இவருக்கு எந்த மாதிரியான கேரக்டர் என்பது தெரியவில்லை.
ரஜினிக்கு வயதானாலும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் ஜோடியாக நடிப்பார் என்பது எதிர்பார்ப்பு..ஒரு வேளை தலைவருக்கு இரட்டைக் குதிரை சவாரியாக இருக்கலாமோ ?
இந்தப் படத்துக்கு இசை சிவாவின் அன்புக்கு உரிய இமான் ஆகும். இதனால் இனிமையான மெல்லிசை பாடலுக்கு உத்திரவாதம் தரலாம்.