தமிழ் சினிமாவின் மறக்க முடியாத சகோதரர்கள் முக்தா ராமசாமி,முக்தா சீனிவாசன் .
பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள் . சிறு வயதில் தந்தையை இழந்து பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள் .தொழில் வேண்டுமே.. 1945 -இல் அண்ணன் முக்தா ராமசாமிசேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் டைப்பிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்தார்.
“பர்மா ராணி” படம் தயாரான போது அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் இயக்குநர்டி .ஆர்.சுந்தரத்துக்கு படு கோபம் வந்து விட்டது. இயல்பிலேயே கோபக்காரர்.” நீ வராவிட்டால் என்ன நானே நடிக்கிறேன் “என நீக்கி விட்டு அவரே கதாநாயகனாக நடித்தார்.
அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தனது செயலாளராக்கி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். தம்பி சீனிவாசனை சும்மா வைத்திருக்க விரும்பவில்லை அண்ணன் ராமசாமி. தம்பியோ கம்யூனிசம் பேசுகிறவர்.
இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் பிழைக்க முடியாது நீயும் வந்து விடு என தம்பியை வற்புறுத்தி அழைத்து வந்து இயக்குனர் டி .ஆர்.சுந்தரத்திடம் உதவி டைரக்டராக சேர்த்து விட்டார். பிறகுதான் அவர்களின் வாழ்க்கையில் மாறுதல் ஏற்பட்டது. முதலாளி என்கிற படம் வெளியானது.
முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் வேலை இல்லாமல் இருந்த சீனிவாசனுக்கு அண்ணனோட சேர்ந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் இயக்குநர் கே.சுப்பிரமணியம்.
இதன் பின்னர் படத்தயாரிப்பில் லாபமும் நட்டமும் கலந்தே வந்தன. ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய படங்கள்தான் வெற்றி விழா கொண்டாடி இவர்களை வாழ வைத்தது.
“நிறைகுடம்” சிவாஜிகணேசனை வைத்து இயக்கிய முதல்படம் , வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றி அடைந்தது.
தவப் புதல்வன் சூரியகாந்தி, அந்தமான் காதலி, பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும், சிவப்பு சூரியன், சிம்லா ஸ்பெஷல், பரிட்சைக்கு நேரமாச்சு, நாயகன், கதாநாயகன் வாய்கொழுப்பு போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.
சிவகுமார் , லட்சுமி, ஸ்ரீப்ரியா , நடிப்பில், சிவசங்கரி அவர்களின் கதையில், விசுவின் திரைக்கதை, வசனத்தில் முக்தாசீனிவாசன் இயக்கத்தில் வெளியான அவன் அவள் அது 25 வாரம் ஓடி விழா கொண்டாடியது . இந்த படங்கள் உட்பட 41 படங்களை தயாரித்துள்ளது முக்தா பிலிம்ஸ்.
வருகிற 2020 இல் இவர்களின் ” ஶ்ரீ வேதாந்த தேசிகர் ” திரைக்கு வர இருக்கிறது.
இந்த 60 ஆண்டு பயணத்தில் தோள் கொடுத்த நடிகர்கள், நடிகைகள் மற்றும தொழில்நுட்பகலைஞர்கள்ஆகியோருக்கு …நன்றி தெரிவிக்கும் வகையில் முக்தா பிலிம்ஸ் வைரவிழா என்ற பெயரில் இம்மாதம் ( டிசம்பர் ) 22 ம் தேதி மாலை 5 மணியளவில் எம்.ஆர்.சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், குமாரராஜா ஹாலில் விழா நடக்கிறது.