ஒரு காலத்தில் வைகைப் புயலை கதற விட்டவர் நடிகை சோனா. வெங்கட் பிரபுவையும் விட்டு வைக்கவில்லை. கோர்ட்டு வரை சென்று பிறகு வெள்ளைக்கொடி காட்டப்பட்டு சமரசம் ஆனது. ஆனால் அதற்கு பிறகு சோனாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் இல்லை.
அம்மாவின் மரணம் அவரை மிகவும் பாதித்து விட்டது.
எங்கே போனார் என்பது தெரியாமல் இருந்தது. திரை உலகை விட்டு விலகி விட்டார்.துறவி ஆகிவிட்டார் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் திடீரென ஒரு குரல்.
“உள்ளேன் அய்யா” என்கிற ஆஜர் குரல். அது சோனா ஹெய்டனுடையது !
“நான் எங்கும் பொய் விடவில்லை. இங்குதான் இருக்கிறேன். அப்படின்னா பார்ட்டியிலும் பார்க்க முடியவில்லையே!
“நான் குடிப்பதை விட்டு விட்டேன்.அதனால் பார்க்கமுடியாமல் போயிருக்கலாம். அப்ப கையில் படம் எதுவும் இல்லையா?
இருக்கே நாலு !பரமபதம் விளையாடு,,அசால்ட்,தேடுதல், பச்சை மாங்கா . நான் வேணாம்னு ரிஜெக்ட் பண்ணிய படங்கள் 12. இப்பல்லாம் செலக்ட் பண்ணிதான் படங்களை முடிவு பண்றேன்” என்பதாக சொல்லியிருக்கிறார் சோனா.
வாம்மா மின்னல்.!