“குறைவாக சாப்பிடுங்கள். குறைவாக தூங்குங்கள்.குறைவாக பேசுங்கள் .ஆசைகள் ,கவலைகளை குறையுங்கள்.” இது யார் சொன்ன அட்வைஸ் என்கிறீர்களா?
நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் கூறிய அட்வைஸ். அவரது இளமையின் ரகசியம் இதுதான் என்கிறார். அவருக்கு சரி ,கோடிகளில் சம்பளம் ,செல்வாக்கு,சொல்வாக்கு எல்லாமே இருக்கிறது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள, தர்பார் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்தான் ரஜினிகாந்த் இத்தகைய ஆலோசனையை சொல்லியிருக்கிறார்.
‘தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்கள் என் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள். அது நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் .
1976 – ல் நான் தெலுங்கில் நடித்த அந்துலேனி கதா வெளியானது. இப்போது, இங்கு கூடியுள்ள 99% பேர் அப்போது பிறந்து இருக்கவே மாட்டீர்கள்.
பிறகு பெத்தராயுடு போன்ற படங்களில் நடித்தேன். நான் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் நன்றாகவே ஓடின. அதற்கு நான் நடித்தது மட்டுமே காரணமல்ல. படம் நடிக்கும் போதே சில மேஜிக்குகள் நடக்க வேண்டும். ஆனால் அது நம் கையில் இல்லை.
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது பல வருட ஆசை. இப்போது தர்பார் படம் மூலம் அது நிறைவேறி உள்ளது. 70 வயதிலும் ஹீரோவா நடிக்கிறீர்களே எப்படி? எனக் கேட்கிறார்கள்.
இவ்வளவு எனர்ஜியுடன் இருக்க சில ஆலோசனைகள் சொல்கிறேன், கேளுங்கள். முதலில் ஆசைகள், கவலைகளை குறையுங்கள்.குறைவான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். குறைவாக தூங்குங்கள். குறைவாக பேசுங்கள் .இதை கடைபிடித்தாலே போதும் எனர்ஜி கிடைக்கும் இவ்வாறு அவர் பேசினார்.