தளபதி விஜய் நடிக்கும் படம் என்றாலே அதனுடைய அசல் எந்த கதாசிரியரின் மூளையில் உருவாகியது அல்லது எந்த நாட்டு படத்தில் இருந்து உருவியது என்கிற ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறார்கள்.
விஜய்யின் ‘சர்கார் ‘படத்தின் கதை இன்னொருவருடையது என சிக்கல் வந்தது.தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் தலையிட்டு தாவாவை சரி செய்தார்.
தற்போது விஜய சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்தும் வரும் மாஸ்டர் படத்தின் கதை கொரிய படத்தின் ( சைலன்ஸ்ட்.) தழுவல் என்பதாக பேசுகிறார்கள். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி வருகிறார். தளபதி விஜய்தான் நாயகன்.
கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடிக்கிறவர் என்கிற பெயர் வாங்கியிருக்கிற வசூல் சக்கரவர்த்தி விஜய்க்கு ‘திருட்டு கதை நடிகர் ‘என்கிற பெயர் வந்து விடக்கூடாது .கதைத் தேர்வில் கவனம் சார்.!