பெரிய இடத்தில கையை வச்சிருக்கீங்களேய்யா. வில்லங்கம் வீடு தேடி வருமே ..என்ன பண்ண போறீங்க என்கிற பரிதாப நிலையில் இருக்கப்போகிறது திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம்.
ஏற்கனவே அனிருத்துக்கு இருக்கிற கதை நாலெட்ஜ் வேற இசை அமைப்பாளருக்கு இல்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். மேலும் ரஜினி,தனுஷ் இவர்களின் நெருங்கிய உறவினர். அப்படிப்பட்ட அனிருத் மீது நடவடிக்கையா?
முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள தர்பார். வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணியில், சங்க விதிகளின் படி, இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உள்ளூர் இசை கலைஞர்களைப் பயன்படுத்தாமல் வெளிநாட்டு இசை கலைஞர்களை அவர் அதிகம் பயன்படுத்தினாராம்
இது குறித்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா ‘பாதிக்கு பாதி இசைக் கலைஞர்களை உள்ளூரில் இருந்து பயன்படுத்தும்படி”அனிருத்திடம் ‘கூறியுள்ளார்.ஆனால், அனிருத், பெயருக்கு சில கலைஞர்களை மட்டும் பயன்படுத்திவிட்டு, வெளிநாட்டு கலைஞர்களை அதிகம் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா, கூறியதாவது:-
“ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அந்த படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் , சங்கத்தில் உள்ள இசை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு இசை கலைஞர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை கடந்த 1/1/2 மாதத்துக்கு முன்பு அனிருத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.அவரும்,“நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து அவருக்கு ஒரு கடிதமும் சங்கத்தின் மூலமாக அனுப்பப்பட்டது. அதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.தர்பார்’ படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி, வெளிநாட்டில் தொடங்கிய போது, அதில் கண் துடைப்புக்காக இங்குள்ள கலைஞர்கள் 5 பேருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.ஆனால், வெளிநாட்டு கலைஞர்கள் 50 பேர்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.
இது குறித்து கேட்டதற்கு, “முடியலை…சாரி”என சம்பந்தமில்லாதது போல் ஒதுங்கி கொண்டார்.
திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், 50 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட அனிருத்தையும் சேர்த்து மொத்தம் 1,200 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள்.
அனிருத்தின் பொறுப்பற்ற பதில்,நடவடிக்கை, பாரம்பரியமான சங்கத்தை அவமதித்ததாக கருதப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க செயற்குழு கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.”இவ்வாறு அவர் கூறினார்.
இது மட்டுமல்ல “தர்பாரில் வருகிற கிழி என்கிற பாடல் தேனிசைத் தென்றல் தேவாவின் “தண்ணிக்குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா… “என்கிற பாடலின் காப்பி என்று கூறப்பட்டது. இதற்கு இப்போது புது விளக்கம் சொல்கிறார்கள்.
தர்பார் படத்தில் அனிருத்துடன் இணைந்து தேவா பணியாற்றியதாக சொல்கிறார்கள். பெரிய இடத்து தப்பு என்றால் எப்படிப்பட்ட சப்பைக்கட்டு.1