இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் தடவையாக தன்னுடைய வீட்டில் வைத்து இசையமைத்து வருகிறார். முன்னர் பாலமுரளி கிருஷ்ணாவை வைத்து ஒரு பாடலை தன்னுடைய வீட்டில் பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசை அமைப்பு நடத்தியதில்லை.
பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.
எஸ்.என் .எஸ் ,மூவிஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்-ஆக அசத்தி இருக்கிறார் இளையராஜா.