
போகிற போக்கினைப் பார்த்தால் பா.ஜ.க.இல்லாதவர்கள் இந்தியர்கள் இல்லை என்பதாக சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.அந்த அளவுக்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்காக பாஜக வினர் கடுமையான அளவுக்கு கட்சியின் படையை எறக்கப்போகிறார்கள் .மத ரீதியாக இந்தியாவை துண்டாடப் பார்க்கிறார்கள்.
பாகிஸ்தானில் இருக்கிற குருத்வாராவில் நடந்த வன்முறையை கண்டித்து நடிகை டாப்ஸி ஒரு பதிவு போட்டிருந்தார். “இனி நமது டர்ன்!” என சொல்லியிருந்தார் .
இதற்கு”நீ இந்தியனா?” என ஒருவர் பதில் பதிவு போட்டிருந்தார்.
இதற்கு டாப்ஸி “நான் இந்தியன் என்பதற்கான டாக்குமெண்ட்ஸ்களை உனக்கு காட்டணுமா?” என கோபமாக கேட்டிருக்கிறார்.
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?












