“அடங்குன்னா, அடங்கக்கூடாதுன்னு எங்கண்ணன் சொல்லிருக்காரு..பெரிய வீட்டுப் பொண்ண கல்யாணம் பண்ணுனாதான் கெத்து” என்கிற வசனம் எரிகிற வீட்டில் சீமத்தண்ணியை ஊத்துன மாதிரி இருக்குங்க. ‘அடங்க மறு ” என சொன்ன ஒரு தலைவரை குறிப்பிடுவது மாதிரி இல்லையா?
திரௌபதி படத்தின் முன்னோட்டக் காட்சியில் இதைப்போல இன்னும்பல ‘கருத்தான’ வசனங்களை கேட்க முடிந்தது. சென்சாரில் அனுமதி பெற்ற முன்னோட்டம்தான் அது.
“கீழ்த்தரமானவங்களை இப்படித்தான் கொடூரமா கொல்லனும்.எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க.உங்களுக்காக நான் அப்பியர் ஆகுறேன்.”என்கிற வசனம் லாயர் கருணாஸ் பேசுகிற வசனம்.
“இந்த கிராமத்துக்குள்ள யார் வரணும்,யார் கால் வைக்கணும்கிறத நாங்கதான் முடிவு முடிவு பண்ணுவோம்.அதுக்கப்புறம் இவங்களையும் இவங்க ஆளுங்களையம் எங்க பார்த்தாலும் வகுந்து எடுங்க.என்ன ஆனாலும் நான் பாத்துக்கறேன்” இந்த டயலாக்கை ஊர் பெரிய தலைக்கட்டு பேசுகிற மாதிரி இருக்கு.
கதையின் களம் விழுப்புரம் என தெரிகிறது. எந்த சாதியையும் உயர்த்திப் பிடிக்கல என சொன்னாலும் சில வசனங்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கிறது. தூண்டி விடுவதற்கு அரசியல் கட்சிகள் இருக்கிறபோது சென்சிடிவ்வான காட்சிகள் வசனங்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை.
இந்த படத்தில் ஷாலினி அஜித்குமாரின் அண்ணன் ரிச்சர்டு,கருணாஸ் உள்ளிட்டபலர் நடித்திருக்கிறார்கள்.