இதுவரை நடிக மன்றங்களின் சார்பில் எத்தனையோ இலவச மருத்துவ முகாம்கள் நடந்திருக்கின்றன. ஆனால் யாருமே குழந்தை இல்லா பிரச்னைக்காக முகாம்கள் நடத்தியதில்லை. முதன் முதலாக மக்கள் செல்வன் விஜயசேதுபதி ரசிகர்கள் அத்தகைய முகாமை நடத்தி பெயரை தட்டி சென்றிருக்கிறார்கள். நல்ல முன்னுதாரணமாகவும் இருக்கிறார்கள்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது
அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை,ஆகிய பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் மற்றும் இதர பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
பிறந்த நாள் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , இன்றைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது .