எதுக்கு பொங்கல் நேரத்தில் ரிலீஸ் பண்ணனும் ,அவனவன் முட்டி மோதி தியேட்டர்களை பங்கு போட்டுக் கொண்டுவிடுவான் ,நமக்கு டூரிங் டாக்கீஸைத்தான் விட்டு வைப்பான் என்று நினைத்தாரோ என்னவோ தெலுங்கு மாஸ் மகாராஜா ரவி தேஜா, தனது படம் டிஸ்கோ ராஜாவை நாளை 20 ஆம் தேதி ரிலீஸ் பண்ணுகிறார். நம்ம ஊர் பாபி சிம்கா தான் வில்லன்.
இதுவும் புத்திசாலித்தனமான முடிவுதான்.!
நெரிசலில் சிக்கி மூச்சு முட்டி மயக்கம் போட வேண்டியதில்லை அல்லவா!
“என்னை சம்பளத்தில் கெட்டியாக கறாராக இருக்கிறவன்னு பிரசாரம் பண்ணுறாங்க. 1000 ரூபா சம்பளம் பேசிட்டு 800 ரூபா கொடுத்தா யாருங்க வாங்கிக்குவாங்க. ஆனா என் மூணு படம் பெயிலியர் ஆனப்ப பைனல் செட்டில் மென்ட் கொடுக்க வந்தாங்க. வேணாம்னு சொல்லிட்டேன். கொடுத்த செக்குகளை கிழிச்சு எறிஞ்சேன் .இத யாராவது சொல்றாங்களா?” என்று கேட்கிறார்.
நம்ம தமிழ்நாட்டில் அப்படி கிழிச்சு போட்ட நடிகர்களும் இல்லை. பணத்தை முறையா செட்டில் பண்ணின மகராஜன்களும் இல்லை. படம் பிளாப் ஆனா சூப்பர்களே ஒதுங்கிப் போயிடுவாங்க.