கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் .கதாநாயகியாகவே நடித்துவிட்டார் திரிஷா. இன்றும் அன்றலர்ந்த மலராகவே இருக்கிறார். காயகல்பம் சாப்பிடுகிறவர்கள் கூட திரிஷா மாதிரி கட்டான உடல் எடுப்பான இளமையுடன் இருக்க மாட்டார்கள். அம்மா உமாவின் ஆலோசனை.! உமாவே இன்னும் இளமையுடன்தான் இருக்கிறார். திரிஷாவுக்கு தற்போது வயது 36.
இவரளவுக்கு கதாநாயகியாக தற்போது யாரும் நீடித்ததில்லை. கல்யாணம் வரை சென்று யூ டர்ன் அடித்து கன்னிப்பருவத்துக்கு திரும்பி இருக்கிறார். தற்போதைய நாயகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டாகி விட்டது.
தற்போது கையில் இருக்கிற படங்கள் ராங்கி,பொன்னியின் செல்வன் ,பரமபதம் விளையாட்டு . அண்மையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவரது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார்.
ஒருவர் “உங்களின் கல்யாணம் எப்போது?” கேட்டிருந்தார்.
அதற்கு “கல்யாணத்தில் தற்போது நாட்டமில்லை” என்று சொல்லி விட்டார்.
இன்னொருவர் “உங்களின் கடைசிகாலத்துக்குள்ள கோமாளித்தனமா செய்ய ஆசைப்படுகிற காரியம் என்ன?” கேட்டிருக்கிறார்
அதற்கு திரிஷாவும் “வேகாஸில் கல்யாணம் பண்றது!” என்று வேடிக்கையாகவே பதில் சொல்லி இருக்கிறார்.
குறும்பு!