
சேலம் திராவிடர் கழக மாநாட்டின் (1971 ) போது ராமர் சீதையை பற்றிய ஆபாச படங்களை எடுத்து சென்றார்களா ,இல்லையா என்பது பற்றி ரஜினிக்கும் தந்தை பெரியாரை பின்பற்றுகிறவர்களுக்கும் ஒரு சண்டை நடந்து வருகிறது.
துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் “ராமர் சீதை ஆபாச படங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக ” கூறி இருந்தார்.
இதை மறுத்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் “மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி காந்த் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் “என ரஜினியை எச்சரித்திருந்தார் .அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடந்து திகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் இன்று காலையில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “நான் பத்திரிகைகளில் வந்திருப்பதை வைத்துதான் அப்படி பேசினேன் ,அதனால் நான் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை” என்பதாக தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூ இரு தரப்பினரையும் காயப்படுத்தாமல் பாராட்டி விட்டார்.
” எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் ரஜினி சார் சொன்னது சரியா ,தப்பா என்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியாது. ஆனால் தைரியமாக அவரது நிலைப்பாட்டை பயமில்லாமல் சொன்னதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். “
இதற்கு திராவிடக் கழகத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பதுடன் ஆபாசமாகவும் பதிவு செய்து வருகிறார்கள். இதற்கும் பதில் சொல்லியிருக்கிறார் குஷ்பூ “நான் பெரியாரை பின்பற்றுகிறவள்,”












