சேலம் தி.க.மாநாட்டுக்கு இன்றைய அளவுக்கு 1971 -ல் விளம்பரம் கிடைத்திருக்குமா இல்லியோ, தெரியாது.!
சூப்பர் ஸ்டார் ரஜினிஅண்மையில் துக்ளக் விழாவில் பேசிய பேச்சு அகில இந்திய அளவில் ஊடகங்களின் விவாதப் பொருளாகி இருக்கிறது.
“அவர் திட்டமிட்டுத்தான் அப்படி பேசினார்.பாஜகவின் தூண்டுதலும் ரஜினியின் ஆன்மீக அரசியலும் அவரை பேச வைத்திருக்கிறது” என ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.
“ஆன்மீக அரசியலில்தான் பாஜக இறங்கியிருக்கிறது. மத ரீதியான அணுகுமுறை இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விடும் “என அறிவார்ந்தவர்கள் அபாய அறிவிப்பு விடுகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினி அவ்வாறு பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது அதிமுகவில் ஒரு பிரிவினரின் கருத்து.அதைத்தான் அமைச்சர் ஜெயக்குமார் பிரதிபலித்திருக்கிறார்.
இந்த நிலையில் ரஜினியின் பேச்சுக்கு பாமக அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை. அதன் தலைவர் டாக்டர் ராமதாஸ் அமைதியாகவே இருந்து வருகிறார்.
நண்பரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் பெரியாரின் பல கொள்கைகளுடன் உடன்பாடு உள்ளவர். கடவுள் மறுப்பாளர். சீர்திருத்தவாதி. இந்திய ஒற்றுமையில் ஆர்வம் உள்ளவர். தமிழர்.
இவருடைய கருத்தும் என்னவென தெரியவில்லை. பூடகமாக சில கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்.
“ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை விட அமைதியாக இருந்துவிடுவதே வீரம் .கருத்து சொல்லுவதே வீண் “என சொல்ல வருகிறாரா, அல்லது “எங்கள் இடத்தில் இருந்து அல்லது நடுநிலையுடன் நின்று அந்த பிரச்னையை பார்த்தால்தான் உண்மை புரியும் ” என சொல்கிறாரா என்பது வெளிப்படையாக இல்லை என்கிற கருத்தும் இருக்கிறது.
இவராவது இப்படி குழப்புகிறார்! டாக்டர் ராமதாசின் அமைதிக்குத்தான் என்ன காரணம் என்பது தெரியவில்லை.