நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடந்தது இத்தேர்தலில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது.இதற்கிடையே தொடரப்பட்ட வழக்கு காரணமாக பதிவான வாக்குகள் என்னும் பனி நிறுத்தி வைக்கப்பட்டு,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், தபால் வாக்குகள் முறையாக நடிகர்களை சென்று சேரவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுவை விசாரித்த நீதிபதி நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார் மேலும் புதிய தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் என்பவர் தலைமையில் நடத்தவும் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து விஷால் அணியினர் வரும் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனராம்.