இதெல்லாம் சினிமா உலகத்தில் சகஜம்தான்.!
இன்றைய தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா.!
இவரது ஒரிஜினல் பெயர் டயானா மரியம் குரியன்.
இயக்குநர் ஏ.கே.சாஜனிடம் உதவியாளராக இருந்தவர் இயக்குநர் ஜான் டிட்டோ.
2003- ஆம் ஆண்டு .
சாஜனும் இவரும் ஒரு கதை விவாதம் தொடர்பாக செருதுருத்தியில் இருந்தார்களாம் .அப்போதுதான் பெயர் வைப்பது பற்றிய யோசனை கேட்கப்பட்டிருக்கிறது.
இனி ஜான் டிட்டோவே பேசுவார் கேளுங்கள்.
“அப்போது பிரபல போட்டோகிராபர் சுவாமிநாதன் அங்கு வந்தார்.ஷோரனூரில் சத்தியன் அந்திக்காடின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.
அந்தப்படத்தில் டயானா என்கிற கிறிஸ்டியன் பொண்ணு நடிக்கிறா.அவளுக்கு பேர் வைக்கணும்னு சார்தான் சொல்லணும்னு சுவாமிநாதன் டைரக்டர் அந்திக்காட்டிடம் கேட்டார்.
அவர் என்னை பார்த்து “ஒரு பேரு சொல்லப்பா “ன்னு சொன்னார்.
எனக்கு கமலாக்குட்டி எழுதிய கதையில் வருகிற பெங்காலிப் பொண்ணின் பேரு ஞாபகம் வந்தது.நயன்தாரான்னு சொன்னேன். அந்த பேரைத்தான் அந்திக்காட் சார் சொன்னார் .இன்னிக்கு அந்த பேரு பிரபலம். ஆனா அந்த பேரை சொன்ன நான் வேலையில்லாம வீட்டில் இருக்கிறேன்.”என்று நினைவு கூறினார்.
!