முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்…
சங்கீதாவை காதலித்து கரம் பற்றியவர். இவர்களுக்கு சஞ்சய் ஜேசன் ,திவ்யா சாஷா இரு பிள்ளைகள்.
சஞ்சய்க்கு சினிமாவில் நாட்டம் .இருந்தாலும் மேல் படிப்புக்காக கனடா சென்றிருக்கிறார். அங்கு நேற்று ( 26 ஆம் தேதி .) இந்தியக் குடியரசு நாளை நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறார். பட்டு வேட்டி ,பட்டு சட்டை. நெஞ்சில் இந்திய தேசியக் கொடி. வெளிநாட்டில் வாழ்கிற ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் கொண்டாடுகிற தேசியத் திருவிழா.
நெஞ்சில் குடியிருக்கும் நம்ம ஜனம் வெறித்தனம் என்று இங்கு நாம்தான் வெறியேற்றிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி உசுப்பேற்றி உசுப்பேற்றியே பாடலாசிரியர்கள் பணம் பார்க்கிறார்கள்.