Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சாதியை சொல்லி கூடி கும்மியடித்த இயக்குநர்கள் !புறநகர் பட விழாவில்.!

admin by admin
February 1, 2020
in News
425 5
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன் இ. எல்..இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ்,ஆர்.வி.உதயகுமார் .தருண்கோபி ,கே.ராஜன் ஆகியோர் பேசினார்கள்.
“சினிமா ரசிகர்களை வன்மையாக கண்டித்துப் பேசிய ராஜன் வழக்கம் போல குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களையும் ஒரு வாங்கு வாங்கினார்.

You might also like

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

” நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் நடிகன் எப்படி மக்கள் தலைவன் ஆக முடியும்.? உன் தாய் தகப்பனை கவனிக்காமல் இப்படி இருக்கக் கூடாது. இப்போது இங்கு சினிமாவை அரசியலாக்கி விட்டார்கள். அப்படி அரசியலாக்கி அரசியல்வாதிகளிடம் மோதிக்கொண்டு பின் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.”என்கிறார் ராஜன்.

இயக்குநர் தருண்கோபி பேசுகையில் “தயவுசெய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள்.  தப்பா படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லி எவனாவது இனி வந்தா ******** அடிப்பேன். எங்களுக்கு என்ன சாதின்னு தெரியாம தான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். சிலபேர் அப்படி ஒரு டீம் அமைத்துத் திரிகிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று  யாரையோ மனதில் வைத்துக் கொண்டு பேசினார்.

கே.பாக்யராஜ் பேசுகையில்  “தயாரிப்பாளரும் ஹீரோவுமான கமல் கோவின்ராஜ்க்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமா டான்ஸ் ஆடினார். நமக்கு எப்போதுமே டான்ஸ் வராது. ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால் மின்னல் முருகன் படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால் டயலாக் பேசணும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.

நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில்  ஒருகாலத்தில் தனி க்ளாஸ் வைத்து டீ குடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. ஒரு கை ஓசை என்ற படத்தில் இந்த விசயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்தளவுக்கு சாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகி விட்டது. இந்தப்படத்தை பொறுத்தவரை சண்டைகள் ரொம்ப நல்லாருக்கும். டான்ஸுக்கு நல்ல இம்பார்ட்டெண்ட் கொடுத்து இந்திரஜித் இசை அமைத்துள்ளார். இந்தக்காலத்தில் படம் எடுக்கிறதும் அதைச் சரியா கொண்டு வருவதும் பெரிய விசயம். இந்த டீம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல உதவியாக இருக்கிறார்கள். மக்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கிற பொறுப்பு ஹீரோக்களுக்கும்  உண்டு. ஏன் என்றால் மக்களிடம்  இவ்வளவு பணம் டிக்கெட்டுக்கு வாங்கக் கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும். படம் டீம் எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ” என்றார்

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில்  “இந்தபடத்தை தயாரித்து நடித்த  கமல் கோவின் ராஜ், . போ ஜெயிச்சுட்டு வா ராஜா என்பது போல இருக்கிறது. இவர் முதல்படம் போல இல்லாமல் கலக்கி இருக்கிறார். தம்பி மின்னல் முருகன் ஸ்டண்ட் மாஸ்டர் அவர் பிரபுதேவா, லாரன்ஸ் போல வித்தியாசமான இயக்குநராக கவனிக்கப்படுவார். புது முகங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சரியான இசை மற்றும் ஒளிப்பதிவு கொடுத்துள்ளார்கள். இன்னும் எவ்வளவு வருசம் தாம்யா சாதியைப் பற்றி பேசுவார்கள். ?

பெரியார் நாயுடு தான். என்னைக்காவது தன் சாதியைச் சொல்லி இருக்கிறாரா?பள்ளிக்கூடத்தில் முதலில் மதம் கேட்கிறார்கள். அப்புறம் நேஷனால்டியை கேட்கிறார்கள். அடுத்து சாதியை கேட்கிறார்கள். அதில் இல்லாவிட்டாலே சாதி ஒழிந்து விடும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. காரணம் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இருக்கிறது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை. மக்களை நேசிக்கும் இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மக்கள் சேவைக்காகத் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஹீரோக்களுக்கு எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து நாங்கள் உழைத்திருப்போம். அவர்கள் எங்களுக்கு எதாவது திருப்பி தருவார்கள் என்று தானே. ஆனால் இங்கு நன்றியை எதிர்பார்க்க முடியாது. சினிமாவிற்காக  ஏதேனும் நன்மை செய்யுங்கள். பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்த எனக்கு இன்னும் படம் கிடைக்கவில்லை. இதெல்லாம் மாறணும்.

தனது இயக்குநர்களை மரியாதை கொடுத்த கலாச்சாரம் ஒன்றுண்டு. எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது கூட தனது இயக்குநர்களை மதித்தார். எம்.ஜி. ஆர் நடிக்கும் போது சம்பாதித்தது மட்டும் தான். அரசியலுக்கு வந்த பிறகு அவர் எதுவுமே சம்பாதிக்கவில்லை. அவருக்கு வெளியில் நடிக்கத் தெரியாது. வெளி மாநிலத்தில் செட் போட்டு படம் எடுப்பதை விட நம்மூரில் செட் போட்டு எடுக்கலாமே..நமது ஜுனியர் ஆர்ட்டிஸுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய மாட்டேன்கிறார்கள். புறநகர் படம் பெரிய நடிகர் படம் போலவே இருக்கிறது. இந்தப்படம் பெரிய வெற்றிபெறும்” என்றார்.

மொத்தத்தில் யாரையோ மனதில் வைத்துக் கொண்டுதான் எல்லோருமே பேசினார்கள். இது சினிமாவில் வாடிக்கையாகி வருகிறது.

Tags: ஆர்.வி.உதயகுமார்கே.ராஜன்தருண்கோபிபாக்யராஜ்புறநகர்
admin

admin

Related Posts

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!
News

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

by admin
June 13, 2026

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?