ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது நியாயமான ஆசைகளை பற்றி எவராவது வாயைத் திறந்திருப்பார்களா?
தங்களது வருவாயைப் பெருக்குவது பற்றி சிந்தித்தவர்களை தவிர வேறு யாரும் ஜெ.வின் பக்கத்தில் இருந்ததில்லை. நலம் விரும்பிகளை அருகில் வரவிடாமல் விரட்டியதாகத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்த சொந்தங்கள் அருகில் வாழ்ந்தும் அவர்களை நெருங்க விடவில்லையே!
அந்த இரும்பு மனுஷி இறந்த பிறகு சொத்துகள்தான் பலரது இன்பக்கனவாக இருக்கிறது.!
எத்தனையோ கோடிகள்.அந்த கோடிகளுக்கு எத்தனை பூஜ்யங்கள் .கூட்டல் பெருக்கல் போடக்கூட தெரியாதவர்கள் கூட விரல்களை எண்ணுகிறார்கள். ஆனால் ஜெயலலிதாவாக நடித்து வருகிற வடஇந்திய நடிகை கங்கணா ரனாவத் நடிகை ‘தலைவி’யின் ஏக்கங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்.
ஆச்சரியம்தான்.!
“ஜெயலலிதா என்னை மாதிரியான கவர்ச்சி நடிகை இல்லை. அவர் ஐஸ்வர்யா ராய் மாதிரி கிளாமர் நடிகை.குழந்தை ,குடும்பம் என்று ஏங்கியவர். நானும் குடும்பத்துக்காக ஏங்குகிறேன் ” என்கிறார் கங்கணா .
— picture courtesy ; kangana ranaut fc
“