“கரையான் புற்று எடுக்க கருநாகம் குடிபுகுந்ததைப்போல “என வடஇந்திய ஆதிக்கம் பற்றி மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொல்லுவார்.
அது நாட்டின் நிகழ்வாகிவிட்டது.
தமிழகத்தை ஆளவந்தவர்கள் தன்னலம் சார்ந்தவர்களாக இருந்ததால் தமிழகம் அடிமைத்தனத்துக்கு பழக்கப்பட்டுவிட்டது .
அதை மாற்றமுடியுமா? பழக்க வழக்கங்களில் ஊறிப் போய்க்கிடக்கும் இந மான உணர்வினை மீட்டெடுக்க இயலுமா? இயக்குநர் இமயம் பாரதிராஜா சொல்வதை தமிழர்கள் கேட்பாளர்களா?
தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்.ரஜினி ஆள அனுமதிக்க முடியாது என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குனர் பாரதிராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,
ரஜினிகாந்த் எளிமையின் உச்சம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இல்லைன்னு சொல்லல . மிகவும் அற்புதமான மனிதர் ரஜினிகாந்த். எனக்கு ஒரு பாலிசி இருக்கிறது உங்கள் பூமியில் உங்கள் மனிதர்கள் ஆள்வது போல், மராட்டியர்கள் மராட்டியத்தை ஆள்வது போல், அசாமில் அசாமியார்கள் ஆள்வது போல், கேரளாவில் மலையாளிகள் ஆள்வது போல், கர்நாடகாவில் கர்நாடக மனிதர்கள் தான் முதலமைச்சராக முடியும்.
எங்களுக்கு ஏன் எங்கள் மண்ணின் மைந்தன் சி.எம். ஆகக்கூடாது? தவறான முன்னுதாரணத்தை காட்டி, இவங்க ஆள வில்லையா, அவங்க ஆளவில்லையா என கருத்து சொல்லக்கூடாது. ஏதோ தமிழன் தெரியாம தூங்கி தொலைச்சிட்டான். இப்ப கொஞ்சம் முழிச்சு பார்க்கிறான். அது ஒன்னும் குறுகிய வட்டம் இல்லை.
நீங்க ஒன்னை யோசிக்கணும், எல்லாமே இடம்பெயர்ந்து வந்தாங்க, வெள்ளைக்காரன் வந்தான், வெள்ளைக்காரன் போய்விட்டான். ஆங்கிலோ இந்தியன் மட்டும் இருக்காங்க.ஆங்கிலோ இந்தியனுக்கு மட்டும் நாம சலுகை குடுக்குகிறோம்.
இங்கே ஒரு வெள்ளைக்காரன் சி.எம்மா வந்தா ஒத்துக்குவீங்களா? வெள்ளைக்காரன் வேணான்னு தானே விரட்டுனீங்க? அங்கேயிருந்து படை எடுத்து வந்தவங்க எல்லாம் இங்கே உட்கார்ந்துடீங்க. தமிழன் காணாம போயிட்டான். எங்கே இருந்து? வடக்கே இருந்து! படையெடுத்து வந்தீங்க இங்கேயே செட்டில் ஆயிட்டீங்க.அண்ணன், தம்பி,மாமன் மச்சான் அப்படீன்னு. உங்களை தமிழன்னு சொல்றதா எப்படி?
பிறப்பால் இந்த மண்ணின் தாய்வழி தந்தைவழி இச்சமூகத்தின் பிறப்பால் எவன் தமிழனோ, அவன் மட்டும்தான் இங்கே ஆட்சி செய்யவேண்டும். எங்கள் மண்ணை ஆள வேண்டும்! இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பாரதிராஜாவின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.