
ஒரு நடிகைக்கு இதைவிட பெருமை வேறென்ன இருக்க முடியும்?
உலகத்திலேயே மிகச்சிறந்த மெழுகுச்சிலை கலை அரங்கம் மேடம் துசாட் அரங்கம் என்று தான் சொல்லுவார்கள். சிங்கப்பூரில் இருக்கிறது.
இந்த அரங்கத்தில் உலகத்தின் தலை சிறந்தநடிகர்கள்,நடிகைகள்அறிஞர்கள்,தலைவர்களின் சிலைகள் எல்லாம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது

அந்த வகையில் யாருக்கும் கிடைக்காத பெருமை நடிகை காஜல் அகர்வாலுக்கு கிடைத்திருக்கிறது.
அவருடைய மெழுகுச் சிலையை சிங்கப்பூரில் உள்ள அந்த கலையரங்கத்தில் திறந்து வைத்திருக்கிறார்கள்.
இதைப் பார்ப்பதற்காக தன்னுடைய அம்மா அப்பாவுடன் ய சிங்கப்பூர் சென்றார் காஜல் அகர்வால்.
அந்த சிலையை பார்த்தவுடன் அப்படியே மெய் மறந்துபோய்விட்டார்.
என்னுடைய சிலையை இவ்வளவு தத்ரூபமாக வடிவமைத்திருப்பவர்களை பாராட்டுகிறேன். அடடா…எவ்வளவு துல்லியமாக செய்து இருக்கிறார்கள். என்னையே நான் பார்ப்பது எவ்வளவு திரில்லானது என்பதை உணர்கிறேன். நான் எதிர்பார்க்காத ஒன்று.
என்னுடைய வாழ்க்கையில் ஒரு பொன்னான நாளை நான் சந்தித்திருக்கிறேன்.உலகின் பிரபலங்களுடன் எனது சிலையும் இணைந்திருப்பது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.”என்கிறார் காஜல் . அவரையும் அவரது சிலையையும்தான் இங்கு பதிவிட்டிருக்கிறோம்.
நீங்களே பாருங்கள் பார்த்து சொல்லுங்க?












