தளபதி விஜய் மீது வருமானவரித் துறையின் கடுமையான நடவடிக்கை மேலும் நீளும் என்று தெரிகிறது. அவரை வைத்துப் படம் எடுத்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வகையில் சன் குழுமத்தையும் விட மாட்டார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.திமுக எம்.எல்.ஏ .செந்தில்பாலாஜி வீட்டிலும் சோதனை நடக்கிறது.
ஆளுங்கட்சியை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சோதனை நல்ல உதாரணம் என்று தளபதி விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அண்மைக்கால விஜய் நடித்துள்ள படங்களில் மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சிக்கும் வகையில் அவர் வசனங்கள் பேசி நடித்து இருந்தார் என்பது எல்லோருக்குமே தெரியும்.
படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நெய்வேலியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நெய்வேலியில் ஐந்து மணிநரம்செய்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் சகோதரர்கள் நிறுவனம், மற்றும் பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் மீதும் இந்த நடவடிக்கை பாய்ந்து இருக்கிறது.
அன்புச்செழியன் அலுவலகத்தில் இருந்து 85 கோடி கைப்பற்றப்பட்ட்தாக சொல்கிறார்கள் தற்போது அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை தேடி வருவதாக சொல்கிறார்கள்.