
அண்மையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டவர் திரைப்பட இயக்குநர் பேரரசு.
தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கியிருப்பவர்.
விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்துமளவுக்கு நெய்வேலியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
நெய்வேலியில் அவருக்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அனுமதி தரக்கூடாது என சிலர் கூடி நின்று கோஷம் போட்டார்கள். அதை கண்டித்து அங்கு விஜய் ரசிகர்கள் திரளாக கூடி தங்களுடைய தளபதிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
இந்த எதிரெதிர் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையின் முடிந்து விடக்கூடாது என்பதற்காக லேசான தடியடி நடத்தியதாக போலீஸ் கூறியிருக்கிறது.
பாஜகவில் அண்மையில் தன்னை இணைத்துக் கொண்ட பேரரசு தனது கட் சியினருக்கு கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜக வினர் போராட்டம் தேவையற்றது! விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல! இந்த மாதிரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்! அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு!” என்பதாக அந்த பதிவில் சொல்லியிருக்கிறார்.












