காதல் இல்லாத படங்கள் வருவதில்லை. அன்பும் காதலும் வேறு வேறு. இவைகளை வெளிப்படுத்துகிற சினிமா அதில் சற்று வன்மத்தையும் குருதியையும் கொட்டி விடும். அத்தகைய கொடுமை இல்லாமல் மென்மையான காதலை சொல்லியிருக்கிறோம் என்கிறார்கள் ஓ மை கடவுளே படக்குழுவினர்.
டில்லிபாபு தயாரித்து இருக்கிற படம். இணைத்தயாரிப்பாளர்களாக அபிநயா செல்வம்,கதையின் நாயகன் அசோக் செல்வன் சேர்ந்திருக்கிறார்கள்.சக்தி பிலிம் பாக்டரி சக்திவேலன் ரிலீஸ் செய்கிறார். இவருக்கு இண்டஸ்ட்ரியில் ‘வெற்றிகரமான ராசிக்கார ஆள் என்கிற சிறப்பு இருக்கிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்குகிற முதல் படம்.இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவசாலி. கவர்ச்சியான தலைப்பில் அம்மாவின் பாசத்தை முதல் முத்தமாக காட்டியவர்.
இந்த படத்தில் இறுதிச்சுற்று ரித்திகா சிங் முக்கிய வேடமேற்றிருக்கிறார்.சின்னத்திரை வாணி போஜனுக்கு இது முதல் படம்.
இந்த விழாவில் பேசிய அனைவரும் ரித்திகா சிங்கின் தொழில் பக்தியைதான் அதிகமாக விமர்சித்தார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. இவரளவுக்கு எந்த நடிகையும் படத்தின் புரமோஷன் வேலைகளில் பங்கேற்றதில்லை.
ஹை வேஸில் படப்பிடிப்பு நடந்தபோது கேரவன் கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது. அருகில் இருக்கிற வீடுகள் ஏதாவது ஒன்றில் ஒருவர் கதவை தட்டுவார் ,இயக்குநர் சென்று அனுமதி வாங்கி அங்கு ரித்திகா சிங்கை அனுப்பி வைப்பாராம். ஐவரும் முகம் கொடுக்காமல் போய் வருவார். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் கிக் பாக்சிங் வீராங்கனை.
அபிநயா செல்வம் ,நிர்வாக தயாரிப்பாளர் நோவா,ஒளிப்பதிவாளர் விது அய்யண்ணா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலன் , சிரிப்பு நடிகர் சாரா ,நடிகை வாணி போஜன்நடிகை ரித்திகா சிங் , தயாரிப்பாளர் டில்லிபாபு ,இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் ,இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ,நடிகர் அசோக் செல்வன் ,ஆகியோர் பேசினார்கள்.
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது.