மகளையும் விட்டுக்கொடுக்காமல் தன்னையும் காப்பாற்றிக் கொள்கிற வகையில் தர்பார் வில்லன் சுனீல் ஷெட்டி சாமர்த்தியமாக பத்திரிகையாளர்களை கடந்திருக்கிறார்.
இவரது மகள் அதியா அப்பாவைப் போல பாலிவுட்டிலும் அழுத்தமாக கால் பதித்து இருக்கிறார். பொதுவாக அங்கு மகள்களுக்குத்தான் மரியாதை அதிகம். அப்பாவை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அப்படி ஒதுக்குப் புறமாக இருக்கிறவர்கள் பிற மாநில படங்களில் கவனம் செலுத்துவார்கள்.
சுனீல் ஷெட்டியும் அப்படித்தான் கோலிவுட் பக்கமாக தர்பார் படத்துக்கு வந்து சேர்ந்தார்.
நடிகை அதியாவுக்கும் ,கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் காதல் என்கிற சேதி வெகுநாட்களாக உலவுகிறது.இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள். அண்மையில் வெளிநாடுக்கு நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தனர் என்பது சூடான செய்தி.
இதை பற்றி அப்பா சுனீல் ஷெட்டியிடம் கேட்டால் என்ன?
“என்ன சார் ,உங்க பெண் கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்கில் இருக்கிறாராமே ,உண்மையா?” என்று கேட்டதற்கு சுழட்டி அடிப்பது போல பதில் சொல்லியிருக்கிறார் தர்பார் வில்லன்.
“நான் யாரோடவும் டேட்டிங்கில் இல்ல.ரிலேஷன்ஷிப்பிலும் இல்ல .! அதனால நீங்க அதியாவிடம் போய் கேளுங்க. அது உண்மைன்னு தெரிஞ்சா என்னிடம் வந்து சொல்லுங்க. அதுக்குப் பிறகு நாம்ப அத பத்தி பேசலாம். உங்களுக்கு தெரியலேன்னா எதுக்கு என்னிடம் வந்து கேட்கிறீங்க?”
எப்படி பதில் !