வெற்றி பெற்றால் சால்வை போர்த்துவதும் தோல்வி அடைந்தால் அந்த சால்வையாலேயே கழுத்தை இறுக்குவதும் சினிமா உலகத்தில் வாடிக்கையான வேடிக்கை.!
ஒரு காலத்தில் நம்ம இயக்குநர் ஏ ஆர் முருகதாஸை டோலிவுட் கொண்டாடியது.
கூப்பிட்டு அட்வான்ஸ் கொடுத்தார்கள். ஆனால் 2017 -ல் அவரது ஸ்பைடர் இரு மொழிப்படம் பயங்கர நட்டத்தை அடைந்ததும் போதுமடா சாமி என்று ஒதுங்கி விட்டார்கள்.
ஆனால் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் தனது அடுத்த படம் முருகதாசுடன்தான் என சந்தோஷமாக அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பில்தான் தற்போது மாற்றம்.
எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் ஓடவில்லை. விநியோகஸ்தர்களும் தர்பார் படம் தங்களுக்கு கோடி கணக்கில் நட்டம் என போராடி வருகிறார்கள். ஆகவே தன்னுடைய படத்தை முருகதாஸ் இயக்கப்போவதில்லை என்பதாக அறிவித்திருக்கிறார் அல்லு அர்ஜூன் .தெலுங்கு இயக்குநரே இயக்குவார் என்கிறார்.
முருகதாஸ் மீண்டும் ஹிட் கொடுத்தால் மறுபடியும் வந்து நிற்பாரா?