“அதுவாக உலாவிக் கொண்டிருந்த புலியை வாலை பிடித்து இழுத்தால் என்ன ஆகும்?ஆனாலும் அடங்கிக் கிடக்கிறோம் சார்” என்கிறார்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து விளக்கம் சொல்ல வேண்டும் என்று விஜய்க்கு மூன்று நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது ,வருமானவரித்துறை.
விஜய் வீட்டில் ரெய்டு என்ற செய்திக்குப் பின்னர் அவரது ரசிகர்கள் பெருங்கோபத்துடன் இருக்கிறார்கள். இதனால் அவருக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவது போல படப்பிடிப்பு நடக்கிற நெய்வேலிக்கு திரண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் நுங்கம்பாக்கத்துக்கு வருகிறார் என்கிற செய்தி அறிந்தால் என்ன ஆகுமோ தெரியவில்லை கவலை இருக்கிறது மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ! ,
இந்து மக்கள் இயக்கத்தை சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்பவர் சீண்டிவிடுவதைப்போல பேசிவருவதாகவும் அவர்களுக்கு கோபம் இருக்கிறது. “அவருக்கு யாரும் பதில் சொல்லக் கூடாது.அறிக்கை எதுவும் தரக்கூடாது” என்று தன்னுடைய இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு விஜய் உத்திரவு போட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
விஜய்யின் திருமணம் சென்னை ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்தில்தான் நடந்தது..தமிழர் முறைப்படி அவர் பட்டு வேட்டி சட்டையில் இருந்தார். சங்கீதா புடவை அணிந்திருந்தார்.ஆனால் அர்ஜுன் சம்பத் சொல்வது சர்ச்சில் நடந்ததாக.! மேலும் சங்கீதா என்கிற பெயரை கிறித்தவ பெயராக மாற்றி விட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் பிழையான தகவல் என்கிற கொதிப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
“எங்கள் இயக்கத்தின் 50 ஆயிரம் வரை இருந்தது. 25 பேர் கொண்டதுதான் ஒரு கிளையின் எண்ணிக்கை. ஆனால் தற்போது அந்த முறையை மாற்றி உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு வருகிறோம். கோடிகளை தாண்டி விட்டது ” என்கிறார் முக்கிய பிரமுகர்.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சம்பாதித்து வாங்கிய வீடுகளின் விவரங்களையெல்லாம் விஜய்யிடம் கேட்டால் என்ன நியாயம் ?”என்கிற கோபமும் இருக்கிறது.