‘இறுதிச்சுற்று ‘க்குப் பிறகு கிக் பாக்சர் ரித்திகா சிங் நடித்திருக்கிற படம் ‘ஓ மை கடவுளே!’
இந்த படம் வருகிற காதலர் தினத்தன்று வெளிவருகிறது.ஆக்ஸஸ் பிலிம் பாக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறபடம்..சக்தி பிலிம் பாக்டரி சக்தி வேலன் ரிலீஸ் செய்கிறார். அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி இருக்கிறார்.
நடிகை ரித்திகா சிங் கருத்து என்ன?
“ஓ மை கடவுளே” எனக்கு கிடைத்திருக்கிற பெரிய வாய்ப்பு.. 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். கதையை கேட்டபோது கோல்டன் ஆப்பர்சுனிட்டியென தோன்றியது. முதலில் என்னை ஈர்த்த விசயம், நாயகி ஒரு கிறிஸ்துவ மணப்பெண் என்பதுதான்.!
என் நெடுநாளைய சிறு வயது கனவு அது. ! . படம் முழுக்க உங்களை புன்னகை பூத்த மலராகவே வைத்திருப்பார்கள். ஸ்கிரீன் பிளே அப்படி! .
அசோக் செல்வன் மிகத்திறமை வாய்ந்த நடிகர். வாணி போஜன் அற்புதமான நடிகை. இப்படம் மூலம் அவர் என் சகோதாரியாக மிக நெருக்கமான உறவாகிவிட்டார். “ஓ மை கடவுளே” வெறும் ரொமான்ஸ் படம் மட்டுமே இல்லை. உறவுகளின் வலிமையை, நட்பின் பெருமையை பேசும் படமாக இப்படம் இருக்கும். டிரெய்லரில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். இப்படம் உங்கள் மனதில் பல காலம் நீங்காது நிற்கும்” என்கிறார்..