பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர்கள் நடந்து ,நகரம் விட்டு நகரம் கடந்து பழனிக்கு பாத யாத்திரையாக முருகனின் பக்தர்கள் செல்வார்கள்.
அதை போல சென்னையில் இருந்து திருப்பதிக்கு நடந்து செல்பவர்களும் உண்டு.
கீழ் திருப்பதியில் இருந்து மலை வழிப்பாதையில் ஏறி திருமலையை பலர் அடைவார்கள். அப்போது பாதையில் சில நேரங்களில் சிறுத்தைகள் தென்படுவது வழக்கம். அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. கூட்டமாக சென்றால் சிறுத்தைகள் வருவதில்லை. இந்த பாதையில்தான் நடிகை ஜான்வி கபூர் நடந்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருக்கிறார்.
வழிகளில் ஆங்காங்கு உட்கார்ந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டராகிராமில் வெளியிட்டிருக்கிறார். கோடீஸ்வர குடும்பத்துப் பொண்ணு.! நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது அவசியமா?
இல்லை என்றாலும் பக்தி.அந்த சின்ன பெண்ணை நடக்க வைத்திருக்கிறது.!
எல்லாம் அந்த ஏழுமலையானின் செயல்.!