யாருக்காவது அமைதி வழியில் கண்டனமோ ,எதிர்ப்போ தெரிவிக்கவேண்டும் என்றால் அந்த நாளை கருப்பு நாளாக அனுசரிப்பார்கள்.
இது உலக நடை முறை.!
எங்களுடைய படத்தை ‘ஏண்டா பார்க்க வரலே?” என கேட்டு ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து கருப்பு நாள் அனுசரித்த விசித்திரத்தை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீகளா ?
காதலர் தினமாக கொண்டாட வேண்டிய நாளை கருப்பு நாளாக அனுசரித்தவர் நமது அண்டை மாநில சகோதர தயாரிப்பாளர்தான். கன்னடத்தில் ‘ஜென்டில்மேன்’என படம் எடுத்தனர். அந்த படத்துக்கு ரசிகர்கள் அவ்வளவாக வரவில்லை. வசூலும் மோசம்.
நமது தயாரிப்பாளர்களை போல நாலாவது நாளிலேயே வெற்றி விழா கொண்டாடத் தெரியவில்லை.
எங்கள் படத்தை பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக ஓட வைக்காததால் நாங்கள் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்று எல்லாமே கருப்பாக்கி விட்டார்கள். ட்வீட்டரிலும் ஹாஷ்டாக் .
வேடிக்கையாக இல்லை.!
இந்த ஜென்டில்மேன் படத்தின் ரீமேக் உரிமையை தமிழ்ப்பட தயாரிப்பாளர் ஒருவர் வாங்கி இருக்கிறாராம். ஜெயம் ரவி அல்லது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என்கிற செய்தியும் காத்து வாக்கிலே வந்தது.