அரசு நடத்துகிற திரைப்படக் கல்லூரி அடையாறில் இருந்தாலும் தனியார்கள் நடத்துகிற கல்லூரிகளுக்குத்தான் மவுஸ் அதிகம். அதிலும் படத்தயாரிப்பாளரே நடத்தினால் புகழுக்கும் வாய்ப்புக்கும் தனி இடம் உண்டு.
பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் “போஃப் டா பிரீமியர் பிலிம் இன்ஸ்டிடியூட் ‘என்கிற பெயரில் திரைக்கல்லூரியை நடத்தி வருகிறார்.
கதை, திரைக்கதை எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆகிய பிரிவுகளில் கல்வியை வழங்கி வருகிறது. மேலும் நடிப்பு பயிற்சியை வழங்கி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியிலிருந்து திரைப்படிப்பிற்காக சான்றிதழ் பெற்று தரும் ஒரே நிறுவனமாக இந்த நிறுவனம் விளங்கி வருகிறது. .
தற்போது உலகத்தரமான வசதிகளுடன், மிகப்பெரும் திரை நூலகத்துடன், வளசரவாக்கத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் மெகாமார்ட் காம்ளக்ஸ்க்கு அருகில், இந்திரா நகர் சாலையில் விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.