சும்மாவே சாமி ஆடுவார் ,சலங்கையையும் கட்டிவிட்டால் சும்மா இருப்பாரா…! தாண்டவமாடி அந்த நடராஜருக்கே டப் கொடுத்து விடமாட்டாரா!
தமிழ்ச்சினிமாவில் தயாரிப்பாளர் கே.ராஜனை தெரியாத அப்பாவி சப்பாவிகள் இருக்கவே முடியாது. தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் ஒரு உறுப்பினர்.
ஏதாவது பிரச்னை என்றால் இவரது குரல்தான் விவகாரமாக உயரும்..
தற்போது இவரது தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறவர்கள் மூன்று ரோஜாக்கள்.!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா …ஆந்திராவின் மருமகள் சமந்தா….வெள்ளை உளுவை தமன்னா.
“இந்த மூன்று நடிகைகளும் தங்களுடன் ஆறேழு அசிஸ்டெண்டுகளை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள் .அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வரை செலவாகிறது. அதுவே ஒரு நாளைக்கு 90 ஆயிரம் வந்து விடுகிறது. இந்த பணத்தையும் தயாரிப்பாளர்கள்தான் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இது அநியாயம்.! அவர்களுடைய அசிஸ்டெண்டுகளுக்கும் தயாரிப்பாளர்கள்தான் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் தலையெழுத்தா?
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொள்கிற அந்த நடிகைகள்தான் அவர்களது அசிஸ்டெண்டுகளுக்கு கொடுக்க வேண்டும் .இதை பற்றி நான் அடுத்த தயாரிப்பாளர்கள் சங்கத் கூட்டத்தில் பேசப்போகிறேன் ” என்கிறார்.
அந்த சங்கக்கூட்டம் எப்போதுங்ணா நடக்கும்?