மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை’தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.
எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி நடிக்கிறார்.சசிகலா வேடத்தில் பூர்ணாவும்,ஜானகி வேடத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது..இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் கங்கனாவின் தோற்றத்தை பலரும் விமர்சித்திருந்தனர்.
அதன் பின்னர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளை முன்னிட்டு ‘எம்ஜிஆர் லுக்’ ஸ்பெஷல் டீசர்,போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதாவாக வரும் கங்கனா ரணவத்தின் 2-வது லுக் தற்போது வெளியாகி உள்ளது. இதில், அ.தி.மு.க கட்சி கொடி பார்டர் போட்ட சேலை அணிந்துள்ளார் கங்கனா. இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது