எச் .வினோத் இயக்கத்தில் மீண்டும் தல அஜித் நடித்துவருகிற படம் வலிமை,.
பாலிவுட் பட அதிபர் போனிகபூருக்காக தல நடித்துக் கொடுக்கும் இரண்டாவது படம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை ,ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன. அண்மையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பைக் விபத்து ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பெருங்காயங்கள் இல்லாமல் அஜித் தப்பியிருக்கிறார்.
இந்த படத்தில் யோகிபாபு இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனைவி வந்த நேரம் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது,