கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிற படம் ‘கர்ணன்.’ மிகவும் எதிர்பார்க்கிற படம்.
அசுரனின் அளப்பரிய வெற்றிக்குப் பின்னர் தனுஷ் -தாணு இணைந்து வழங்குகிற படம்.
பரியேறும் பெருமாளுக்குப் பின்னர் காவிய அளவில் காதலை சொல்கிற படம் என்கிறார்கள். மண்ணின் மணம் மாறாமல் இயக்குநர் மாரி செல்வராஜ் தருகிற இந்த படத்தில் கேரள நடிகை ரசிஷா தனுஷுடன் இணைந்திருக்கிறார்.
திருநெல்வேலி பகுதியில் கர்ணன் படமாக்கப்பட்டபோது அங்கு ஒரு கோவிலின் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
குறிப்பிட்டு சொல்வதானால் அந்த கோவில் முக்குலத்தோருக்கு சொந்தமானது.
“உங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு எங்களின் கோவில் பணிகளை முடித்துக் கொள்கிறோம் “என்று சொல்லி ஒத்துழைப்புத் தந்திருக்கிறார்கள்.
இரண்டாம் கட்டப்பிடிப்பில் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்த படத்துக்காக தனுஷ் ‘ஹாண்டில்பார்’ முறுக்கு மீசை வைத்திருக்கிறார் என்பது வித்தியாசமான செய்தி.