பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரச்னைகளுடன் வெளிவந்தவர்களில் மீரா மிதுனும் ஒருவர்.
“டைரக்டர் சேரன் அங்க கையை வெச்சிட்டார் “என சொல்லி கூப்பாடு போட்டு ஏழரையைக் கூட்டியவர். ஒருவேளை பிக்பாஸின் ஸ்கிரிப்ட்டில் அப்படி இருந்ததோ என்னவோ.!
அப்பாவி சேரன் மனம் உடைந்து கண்ணீர் விட்டதுதான் பலன்.!
மீரா மிதுன் மீது ஏகப்பட்ட புகார்கள்,பணமோசடி பிரச்னை என வட்டமடித்தது. தெலுங்கு ஸ்ரீ ரெட்டி லெவலுக்கு இவரும் மீடியாக்களுக்கு செய்தியானார்.கிளு கிளு படங்களை வெளியிட்டு ஆண் ஆதிக்கம் ,சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் செய்திகளை தட்டிவிட்டார்.
அண்மையில் ஒரு ஊடகத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
“நித்யானந்தா கூப்பிட்டால் போவேன் ” என்பதாக மீரா மிதுன் சொல்லியிருந்ததால் கேள்வி கேட்ட பேட்டியாளர் ” கன்னித்தன்மை உள்ள பெண்களைத்தான் சேர்த்துக் கொள்வார் ” என்பதாக சொல்ல உடனே மீரா மிதுன் “நான் 100 சதவீதம் கன்னித்தன்மை உள்ளவ. வேணும்னா ‘வர்ஜின் ‘டெஸ்ட்டுக்கு தயார் “என்பதாக சொல்லியிருக்கிறார்.
எப்படி சார் இந்தியா வல்லரசாகும்?