
அண்மையில் வெளிவந்திருக்கிற படங்களில் கன்னிமாடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதன் முதலாக இயக்குநராக களம் இறங்கிய போஸ் வெங்கட்டுக்கு பல வாய்ப்புகளுக்கு இந்தப்படம் வழி அமைத்துத் தந்திருக்கிறது.
படத்தில் புதுமுகங்கள் அதிகமாக நடித்திருந்தாலும் கதையின் களமும் காட்சி அமைப்புகளும் கன்னி மாடத்தை முதல் இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
ஸ்ரீராம் கார்த்தி ,சாயா தேவி இருவரும் மிகவும் சிறப்புடன் நடித்திருக்கிறார்கள். ஆணவக்கொலை.சாதி வெறி இவை சார்ந்து எத்தனைதோ படங்கள் வந்திருந்தாலும் பார்க்கிறவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தப்படம்தான்.
தமிழில் சிறந்த படங்களைத் தரவேண்டும் என்கிற நோக்குடன் ரூபி பிலிம்ஸ் படங்களை தயாரிக்கிறது. 
இந்த படம் பெண்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் அவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஹஸீர் முடிவு செய்து தங்கம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
“கன்னி மாடம் பற்றிய தங்களது கருத்துகளை சில நிமிட வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். எந்த தியேட்டரில் கன்னிமாடம் பார்த்தார்களா அதனுடைய டிக்கெட்டுடன் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை வெளியிட வேண்டும்.எந்த விமர்சனம் சிறப்பாக இருக்கிறதோ அந்த விமர்சனத்துக்கு உரிய பெண்ணுக்கு முதல் பரிசு அரை பவுன் தங்கம் வழங்கப்படும். இரண்டாம் , மூன்றாம் பரிசுகளும் தங்கமே!” என அறிவித்திருக்கிறார்.
ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிற விலையில் இருக்கிற தங்கம் சிறந்த விமர்சனத்துக்காக அவர்களுக்கு கிடைக்க இருக்கிறது. கன்னிமாடம் பார்க்கும் பெண்கள் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். செல்போனில் வீடியோ எடுக்கும் வசதி இருப்பதால் முயற்சி செய்து பாருங்களேன்.












