குழாயடி சண்டையில் இரண்டு பெண்கள் மோதிக் கொள்கிற போது தேவையில்லாமல் மூன்றாவதாக யாரோ சிலர் பெயர் அடிபடும்.
“ஓடிப்போனாளே ஒங் கொழுந்தியா ..அவள மாதிரி என்னநெனச்சிட்டியா ?”என்று ஒரு சைடும் “அடி போடி …முந்தாநா ராத்திரி அடுத்து வீட்டுக்காரனுக்கு கோழி கொழம்பு கொடுத்த சீப்பட்ட சிறுக்கிதானே நீ.பேசுறா பாரு பேச்சு “என்று இன்னொரு சைடும் தேவையில்லாமல் ‘அடுத்த வீட்டுக்காரனையும் ‘ கொழுந்தியாளையும் ‘இழுத்து விட்டு போய் விடும் .
அது மாதிரிதான் ஆகிப்போச்சு ஏ.எல்.விஜய் -அஜயன் பாலா மோதல்.!
எழுத்தாளர் அஜயன் பாலா ‘எதற்காக ‘ மோதினாரோ அது முடிவுக்கு வந்து விட்டதாக அவரே சொல்லிவிட்டார்.. ‘தாயா பிள்ளையா பழகினானும் வாயும் வயிறும் வேறுதான “என்கிற அவரது வார்த்தை சொன்னது மோதலுக்கான அடிப்படையை.!
இப்ப என்ன சங்கதி என்றால் , ‘உண்மைக்கு மாறாக வணிகப்பார்வையுடன் மறைந்த தலைவர்களைபற்றி வைத்திருந்த கொச்சைப்படுத்துகிற காட்சிகளை நீக்கச்சொன்னதுதான் மோதலுக்கான அடிப்படையான காரணம்’ என்பதாக சொல்லியிருந்தார் அஜயன்.
அவர் குறிப்பிட்டிருந்த அந்த மறைந்த தலைவர்கள் யார்?
விசாரிக்கிறபோது நமக்கு கிடைத்த தகவல் .
தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் ஜெயலலிதா லிவ் இந்த ரிலேஷன்ஷிப் பில் வாழ்ந்த நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
அது உண்மைதானே! ஜெயலலிதாவே சொன்ன சம்பவம்தான்.
தங்களுடைய வாழ்க்கை ‘கோயிங் ஸ்டடி ‘ என்று பேட்டியில் சொன்னாரே ஜெ.!