
தூத்துக்குடி மாவட்டம் கச்சினாவிளை என்கிற கிராமத்திலிருந்தது வந்தவர் ஹரி கிருஷ்ணன்.
சினிமாவின் மூலமாக ஹரி என அறியப்படுகிற இவர் கமர்சியல் இயக்குநர் என்கிற முத்திரையும் குத்தப்பட்டவர்..இவரது பெரும்பான்மையான படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றவையாகும்.
வேன் ,கார்களை வானத்தில் வீசி எறிவார். வசனங்களில் அரசியல் இருக்கும்.ஆனால் யாரையும் நோகடிக்க மாட்டார் என்றாலும் உண்மை இருக்கும்.
இவரது இயக்கத்தில் ‘ஆறு ,வேல் ,சிங்கம் ,சிங்கம் 2,சிங்கம் 3,’ஆகிய ஐந்து படங்களில் சூர்யா நடித்திருக்கிறார்.
சூர்யாவின் 39-வது படம் ஹரியின் இயக்கத்தில்.!அருவா என்பது பெயர். ஹரிக்கு ராசியான ஆயுதம்.!
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ .ஞானவேல் ராஜா தயாரிக்கப்போகும் படம். ஏப்ரலில் தொடங்கி 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
இசை அமைப்பாளர் இமானுடன் சூர்யா ஹரி இணைகிற முதல் படம் .
சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இந்த படம் அமையவிருக்கிறது.
இந்த படம் எந்த வகை ஜானர் என்பது விரைவில் தெரியும்.












