
இசுலாமிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் திரளாக சென்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்கள் .இவர்களில் பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு ,மாநில உலமாக்கள் பேரவை ,சுன்னத் ஜமாஅத் பேரமைப்பு ,திருவொற்றியூர் ஜாமியா மஜ்சித் சமாதான அறக்கட்டளை ,முஸ்லீம் சுன்னத் ஜமா அத் ,கீழக்கரை இசுலாமிய அமைப்புகள் ,தமிழ்நாடு அஹ்லே சுன்னத் ஜமா அத் கூட்டமைப்பு ,மலபார் முஸ்லீம் அசோசியேசன் உள்ளிட்ட இசுலாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கமல்ஹாசனை சந்தித்து “தங்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக “நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் அறிவுரைப்படி மலபார் முஸ்லீம் அமைப்பினரும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை சில நாட்களுக்கு முன்னர் இசுலாமிய அமைப்பினர் சந்தித்து பேசியது நினைவு இருக்கலாம். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.













