
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்துப் பேசியது நினைவில் இருக்கலாம்
ஒவ்வொரு கட்சியினரும் அந்த கூட்டத்தின் முடிவுகளை எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் இல்லாமல் போய் விட்டது. கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு ஏமாற்றம்.
“தனக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டதாக” அந்த கூட்டத்தின் முடிவில் ரஜினிகாந்த் சொன்னது மற்ற கட்சியினரின் துப்பறிகிற மூளையை பலவகைகளில் சிந்திக்க வைத்தது.
ரஜினியின் வட்டாரத்தில் குழப்பம் இருப்பதாக உணர்ந்தார்கள்.
கட்டிக்கொண்டு வா என்று சொன்னால் வெட்டிக்கொண்டு வருகிற தொண்டர்களைத்தான் தமிழக அரசியல் பார்த்திருக்கிறது.
ஆனால் ரஜினியின் ஏமாற்றம் எதுவாக இருக்கும். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை மக்கள் விரும்பவில்லை என்பதை மாவட்ட செயலாளர்கள் சொல்லியிருப்பார்களா?
ஆனால் அப்படி எதுவுமில்லை என்பதாக சொல்லியிருக்கிறார் தமிழருவி மணியன்.
இவர் அவ்வப்போது ரஜினியை சந்தித்து திரும்புகிறவர். இதனால் ரஜினியின் உள்ளத்தில் இருப்பது இவருக்குத் தெரியும் என்று ஊடகங்கள் நம்புகின்றன.
விழுப்புரத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய தமிழருவி மணியன் “எதனால் தலைவருக்கு ஏமாற்றம் “என்பதை சொல்லியிருக்கிறார்.
“தனது ஏமாற்றத்தை பிறகு சொல்கிறேன்”என்று சொன்ன ரஜினிக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறார் தமிழருவி மணியன்.
“ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களை சந்திக்கவில்லை என்பதுதான் அவரது ஏமாற்றமாக இருந்தது”என்கிறார் .
அப்படியானால் ரஜினியின் மன்றத்தினர் எதிர்பார்ப்பு என்ன ,ஒரு இயக்கத்தின் வலிமையே மக்களை சார்ந்து இருப்பதுதானே!
தலைவர் ரஜினி சொல்லியும் கேட்காதவர்களா அவரது ரசிகர்கள்? மற்றோரு கருத்தையும் தமிழருவி மணியன் சொல்லியிருக்கிறார்.
“திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ரஜினியோடு இணைய வேண்டும் “என்பது ரஜினியின் ஆசை என்கிறார் தமிழருவி.
அப்படியானல் ரஜினியிடம் போதிய படை இல்லையா..? இப்படியாகவா ரஜினி நினைக்கிறார்? இப்படி நினைத்தால் அவருக்கு இது தோல்விதான்!
இன்னும் சிலவற்றை தமிழருவி அவிழ்த்து விட்டிருக்கிறார்.
“ரஜினி முதல்வர் பதவியின் இருக்கமாட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த யாரும் பதவியில் இருக்க மாட்டார்கள் . அவர் அதிகாரத்தில் இருக்க மாட்டார். கட்சி வேறு ஆட்சி வேறு இரண்டுக்கும் தலைமை வேறு வேறு.”என்பதாக சொல்கிறார்.
ஆக மொத்தத்தில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்கிறார்.
“ரஜினிதான் முதல்வராக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.இதற்கு எதிரிடை யான எந்த யோசனையும் அவர்கள் விரும்பமாட்டார்கள். அதிகாரத்துக்கு வரமாட்டேன் என்று ரஜினி சொன்னதாக தமிழருவி மணியன் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது.
ரஜினி அவ்வாறு சொல்லியிருந்தால் ஏராளமான மாவட்ட செயலாளர்கள் பதவி விலகி இருப்பார்கள்.
“கூட்டத்தில் நடந்தவைகளை மனைவியிடம் கூட சொல்ல மாட்டோம் என்பதாக மாவட்ட செயலாளர்களிடம் சத்தியம் வாங்கினார் ரஜினி”என்பதாகவும் சொல்கிறார்கள்.
வேடிக்கை,விசித்திரமான செயலாக இருக்கிறது.!












