‘உங்கள் நண்பன் ‘என காவல் துறையினரை அழைக்கத்தொடங்கியது காங்கிரஸ் ஆட்சி காலத்திலா,திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி காலத்திலா என்பது தெரிய வில்லை.
போலீஸ் துறை மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படத்தொடங்கிய காலத்தில் ‘மே ஐ ஹெல்ப் யூ ‘ ‘உங்கள் நண்பன் ‘என்கிற வாசகங்கள் காவல் நிலையங்களில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கிறோம்.
காலப்போக்கில் அந்த வாசகங்கள் மரியாதை இழந்தன. உங்கள் நண்பன் என்று காவல் துறையினரை சொல்வதற்கு மக்கள் பயப்படுகிறார்கள்.
அந்த அளவுக்கு கொடூரர்கள் பலர் காவல் துறையில் இருக்கிறார்கள்.
“காவல் துறை உங்கள் நண்பன் ‘என்கிற திரைப்படம் அவர்களை உயர்த்திப் பிடிக்கிற படமா,உண்மையை ஒளிவு மறைவின்றி சொல்கின்ற படமா?
“ஒளிவு மறைவு இல்லாமல் மக்கள் இன்று என்ன நினைக்கிறார்களோ அதை சொல்லியிருக்கிற படம் “என்கிறார் தயாரிப்பாளர் பாப்டா தனஞ்செயன்.

10 சதவீத படங்களில் மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.”என்றார்.
நடிகர் மைம் கோபி பேசும்போது “சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டு தனமாக அவர் மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். இப்படத்தின் ஆக்ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து, மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.”என்றார்.
நடிகர் ராம்தாஸ் பேசுகையில் “இயக்குநர் ஆர்.டி.எம் ஒரு மினி மணிரத்னம் எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்க கூடியவர். இப்படத்தில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சி”என நன்றி சொல்லிக்கொண்டார்.
விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான தனஞ்செயனே தொகுத்து வழங்கியதுதான் ஆச்சரியம்.