
எப்போது விடியும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அறிவிப்புக்காக இன்று ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
காலையில் இருந்தே போயஸ் கார்டன் வீடு,ராகவேந்திரா கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடி விட்டார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் 38 பேரும் வந்து விட்டார்கள்.இவர்களுடன் கலந்து பேசிவிட்டு எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்பதுதான் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.
ஆனால் அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசவில்லை .நேரடியாகவே பிரஸ் கான்பரன்ஸ் தான் .!
லீலா பாலஸ் நட்சத்திர விடுதிக்கு வந்ததும் வெடிகள் வெடித்து வரவேற்பு கொடுத்தார்கள்.
அவர் அழுத்தம் , திருத்தமாக சொல்லிவிட்டார்.
“நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை. நான் நினைத்திருந்தால் 1996 -லியே அந்த நாற்காலி வந்திருக்கும் அமர்ந்திருப்பேன்.45 வயதிலேயே வராத ஆசை இந்த வயதில் வந்தால் மக்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?
என்னை பைத்தியக்காரன்னு நினைக்கமாட்டாங்களா? ஆன்மீக பாதைக்கு சரியானதாக இருக்குமா?
தேர்தலில் நின்னா ரெண்டு பெரிய ஜாம்பவான்களை சந்திக்க வேண்டியதிருக்கும். .ரெண்டு மலைகள் அசுர பலம் உள்ளவங்க. வாழ்வா சாவா என்கிற நிலை.பத்து வருசமா பதவியில் இல்ல.சரியான வாரிசுதான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம்,கட்டமைப்பு ,ஆள் பலம் ,பண பலம் இந்த அ மைப்புடனும் மோத வேண்டியது இருக்கு.
அடுத்து ஆட் சி அதிகாரம் , பணம் ,கஜானாவே கையில வெச்சிருக்கிற இயக்கம் ஆகி ரெண்டு சக்திகளுடன் மொத வேண்டியதிருக்கு.
அதனால அரசியல் மாற்றம் ,ஆட்சி மாற்றம் வந்தாக வேண்டும் .இதற்காக மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.இந்த விழிப்பு உணர்வுதான் அதிகார பலம் பணபலம் ரெண்டையும் தூள் தூளாக்கும்.
1967 -ல் புரட்சி நடந்தது. அதே புரட்சியை நடத்திக் காட்டுவோம் .அரசியல் புரட்சி வெடிக்கணும்” என்பதாக சொன்னார்.
“ப.சிதம்பரம்,மூப்பனார் ,சோ ஆகியோர் என்னை முதல்வராக பதவியில் அமரச் சொன்ன போதே அதை மறுத்து விட்டவன் நான்!”என்பதை நினைவூட்டினார் சூப்பர் ஸ்டார்.
அவரது பேச்சு அவரே சொன்னதை போல “மீன் குழம்பு வச்ச சட்டியை கழுவாமல் சக்கரை பொங்கல் வச்சது மாதிரிதான் “இருந்தது .