கலைப்புலியாக இருந்தாலும் தாணு அரசியல் புலி என்பதற்கு எத்தனையோ அடையாளங்கள் இன்றும் இருக்கின்றன.
சூப்பர் ஸ்டார் அரசியலுக்குப் புதுசு.
கலைப்புலி தாணுவுக்கு அரசியல் பழசு .
இவரால் பலன் பெற்றவர்கள் இன்றும் தலைமையில் இருக்கிறார்கள்.
அரசியலில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.
இழந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா?
தாணுவைத் தவிர !
இழந்த பணத்தில் எத்தனையோ திரைப்படங்களை எடுத்திருக்க முடியும். அரசியல் என்பது பொருளீட்டவே என்றாகி விட்ட பிறகு இவர் மட்டும் அதிலிருந்து விலகி நிற்கிறார் . அதிகம் இழந்தவர் .
ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் தாணு ஒருவர். இவர்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை சூட்டியவர் என்பது ரஜினியின் வரலாறு சொல்லும்.
எதற்காக இந்த முகவுரை..?
எத்தனையோ தடவை இவர்கள் சந்தித்திருக்கிறார்கள் என்றாலும் இன்றைய ஒரு மணி நேர சந்திப்பு எதையோ ஒன்று உள்ளடக்கி இருக்கிறது.!
அது எதுவாக இருக்கும் என்பது அவர்களால் மட்டுமே உறுதி செய்யப்படவேண்டியவை.!
தனது அரசியல் பிரவேசம் பற்றி அண்மையில் ரஜினி பேசியவை கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிற நிலைமையில் தாணுவை சந்தித்திருப்பது முக்கியமான நிகழ்வாகும்.
விநியோகஸ்தராக இருந்து பிரமாண்ட தயாரிப்பாளர் என்கிற நிலைக்கு உயர்ந்த தாணுவுக்கு ரசிகனின் நாடித்துடிப்பு மிக நன்றாகவே புரியும் ,தெரியும்.
டாக்டர் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் இருவரது வெற்றி ரகசியமும் இவருக்குத் தெரியாமல் இல்லை..
“நட்பு ரீதியான சந்திப்பு “என்று இருவரில் எவர் சொன்னாலும் அது உண்மையாக இருக்காது .அவர்களால் அரசியலை தொட்டிராமல் பேசி இருக்க முடியாது.
அப்படியானால் என்னதான் பேசி இருப்பார்கள்?
முதல் தடவையாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி சொன்ன உத்தேச முதல்வர் பெயர்ப் பட்டியலை ரசிகர்கள் ஏற்கவில்லையே ஏன் என்பதை பற்றிய விவாதமா?
எதிர்வரும் காலத்தில் இப்படித்தான் தனது அரசியல் பார்வை இருக்கப் போகிறது, உங்களது கருத்து என்பதை கேட்டறிந்தாரா?
காலம்தான் பதில் சொல்லும்!